கால்நடை உரம்
கால்நடை உரம்
மாட்டு சிறுநீரில் நைட்ரஜன், சல்பர், பாஸ்பேட், சோடியம், மாங்கனீசு, கார்பாலிக் அமிலம், இரும்பு, சிலிக்கான், குளோரின், மெக்னீசியம், சிட்ரிக், கால்சியம் உப்புக்கள், வைட்டமின் போன்றவைகள் உள்ளது.
நம் முன்னோர்கள் அனைத்து வகை பயிரிக்கு பல ஆண்டுகளுக்கு முன் இருந்து பயன்படுத்தினர்.
நாட்டு மாட்டு கோமியம் நீர் உடன் கலந்து பாச்சு வதன் மூலம் அதிக விளைச்சல் கிடைக்கிறது மேலும் வேர் பூச்சி தாக்குதலை 50% தடுக்கிறது பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளை தருகிறது.
கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளை மட்கச்செய்து பயன்படுத்துவது தொழு உரம். மாடுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 கிலோ சாணத்தையும், 6-7 லிட்டர் சிறுநீரையும் கழிக்கின்றன.
இவ்வாறாக ஓராண்டுக்கு 3.5 டன் சாணமும், 2500 லிட்டர் சிறுநீரும் ஒரு மாட்டிலிருந்து கிடைக்கின்றன. மாட்டின் சாணத்தைவிட சிறுநீரில் தான் தழைச்சத்து 50 சதமும், சாம்பல் சத்து 25 சதமும் அதிகம் உள்ளன. மக்கிய தொழு உரத்தில் ஒவ்வொரு 100 கிலோவிலும் தழைச்சத்து 500 கிராமும், மணிச்சத்து 300 கிராமும், சாம்பல்சத்து 500 கிராமும் உள்ளன.
Comments
Post a Comment