வறட்சியில் வளம் தரும் கால்நடைத் தீவனம் வேலி மசால்
வறட்சியில் வளம் தரும் கால்நடைத் தீவனம் வேலி மசால்
ஆடு, மாடு, குதிரை, முயல், எருமை போன்றகால்நடைகளுக்கு புரதச்சத்தும், அதிக சீரான சக்தியும் கொண்ட பசும் தீவனப்பயிராக வேலி மசால் பயன்படுகிறது.
இதன் காரணமாக கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்களும் விவசாயிகளும் வறட்சியைத் தாங்கி வளர்ந்து வளம் தரக் கூடிய வேலி மசால் பயிர் செய்வது லாபகரமானதாக அமையும்.
ஒரு முறை பயிர் செய்தால் பல ஆண்டுகளுக்கு (பல தலைமுறைகளுக்கு) திரும்ப திரும்ப 40 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
நீர் பாசன வசதி இல்லாத மானாவாரி நிலங்களிலும் மழை காலங்களில் விதைத்து வளர்க்கலாம். மழை இல்லாத வறட்சி காலங்களில் வளர்ச்சி இல்லாத மானாவாரி நிலங்களிலும் மழை காலங்களிலும் விதைத்து வளர்க்கலாம். மழைஇல்லாத வறட்சி காலங்களில் வளர்ச்சி இல்லாவிட்டாலும் வேலி மசால் காய்ந்து போவது இல்லை. மீண்டும் சிறு மழை பொழியும் போது கூட கொழுக் கட்டை புள்ளினைப் போல பசுமை கட்டி வளரக் கூடியது.
நீர்பாசன வசதி உள்ள நிலங்களில் 40 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம் குறைந்த நீர்வளம் உள்ள நிலங்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் அமைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் கூட போதுமானது.
வேலி மசாலில் 20 சதம் புரதச்சத்தும், 27 சதம் உலர்தீவன தன்மையும், 53 சதம் செரிக்கும் தன்மையும் உள்ளது. அதிக ஊட்டச் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள இதனை ஆடு, மாடுகள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றன.
வேலி மசால் எளிதில் சீரனிக்கப்படுவதால் அனைத்துசத்துக்களும் விரைவில் உறிஞ்சப்பட்டு பால் மற்றும் மாமிச உற்பத்தி கூடுதலடைகிறது.
ஆரோக்கியமும் சினை பிடிப்புத் தன்மையும் மேம்படுகிறது. இப்பயிர் எல்லா மண் வகைகளிலும் எல்லா பருவங்களிலும் பயிர் செய்யலாம்.
காற்றிலுள்ள நைட்ரசன் சத்தினை சேகரித்து வேர்கள் மூலம் மண்ணிற்கு வழங்குவதால் மண்வளம் மேம்படுகிறது. ஆகவே தென்னை, மா, முந்திரி, மலைவேம்பு, சந்தனம், மகோகனி என அனைத்து மர வளர்ப்பு பண்ணைகளிலும் வேலி மசாலினை ஊடு பயிராக செய்து ஆடு வளர்ப்பு மூலம் அற்புதமான தொடர் வருமானம் பெறலாம்.
தென்னந்தோப்பு மற்றும் பல வகை மர வளர்ப்பு, பண்ணைகளில் வேலி மசால் பயிரினை வளர்த்து பண்ணையைச் சுற்றிலும் கம்பி வேலி அல்லது பயிர் வேலி என ஏதாவது ஒரு வகையில் வேலி அமைத்து வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளை ஏக்கருக்கு 20 ஆடுகள் வீதம் நேரடி மேய்சல் முறையில் வளர்க்கலாம்.
2 ஆண்டுகளில் 20 வெள்ளாடுகள் மூலம் குறைந்த பச்சம் 100 ஆட்டு குட்டிகள் கிடைக்கும். குட்டி ஒன்று 2000 ரூபாய்க்கு விற்றாலும் ஆண்டுக்கு 1 லட்சம் வீதம் இரண்டு ஆண்டுகளில் ஆடுகள் மூலம் ஏக்கருக்கு 2 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மேலும் வேலி மசால் செடியின் வேர் மூலம் ஏராளமான நைட்ரஜன் சத்து நிலத்தில் சேமிக்கப்படுகிறது. ஆடுகளின் கழிவுகளான புழுக்கை மற்றும் கோமியம் மூலம் அனைத்து வகையான அங்ககச் சத்துகளும் பூமியில் தொடர்ந்து சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக தோட்டத்தில் இயற்கையாகவே மண் புழுக்கள் அதிக அளவில் பெருகி மண்ணின் வளத்தை மேம்படுத்துவதால் தென்னை. மரங்களின் காய்ப்பு திறனும், சந்தனம் மலை வேம்பு போன்ற மரங்களின் வளர்ச்சி திறனும் கூடுதலடைகிறது.
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மேலும் வருமானம் பெறவிரும்பினால் இந்த தோப்புகளின் உள்ளேயே நாட்டுக் கோழிகள், வான்கோழிகள், கினிக்கோழிகள், புறா என பறவையினங்களையும் வளர்க்கலாம். இதனால் களை எடுக்கும் பணியினை ஆடுகள் செய்துவிடுகின்றன. உழவு பணியை மண் புழுக்களும், கோழிகளும் செய்துவிடுகின்றன. களைக்கொல்லியும் வேண்டாம். இராசன உரமும் வேண்டாம்.
சாகுபடி :
***எனவே வேலி மசால் சாகுபடி செய்வதெனில் நிலத்தை நன்கு உழவு செய்து, தேவையான அளவு நன்கு மக்கிய தொழு உரம் இட்டு 50 செ,மீ அளவு பார் அமைக்கவும் ஏக்கருக்கு 5 கிலோ விதையினை ஒவ்வொரு பாரிலும் நெருக்கமாக விதைக்க வேண்டும்.
பின்னர் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். 3வது நாள் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். வளர்ந்த செடிகளுக்கு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானதாகும்.
வேலிமசால் விதைகளை விதைப்பதற்கு முன் நீரினை கொதிக்கவைத்து கை பொறுக்கும் அளவுக்கு ஆறிய பின் விதைகளை 5 நிமிடம் ஊறவைத்து பின் நீரினை வடித்து விட்டு நிழலில் உலரவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
நோய் தாக்குதல் எதுவுமின்றி வறட்சியிலும் வளர்ந்து பல கோணங்களில் வளம் தரக்கூடிய அற்புத கால்நடைத் தீவனம். வேலிமசாலினை அனைத்து விவசாயிகளும், கால்நடைப்பண்ணையாளர்களும் வளர்த்து அருட் பெரும் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் வல்லரசுக் கனரவ நனவாக்குவோம். 100 கோடிக்கும் மேலான மரங்களை வளர்ப்போம். இயற்கை வளமும் பொருளாதார மேம்பாடும் பெறுவோம். ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை குறித்த ஆலோசனைகளுக்கும் அற்புத கால்நடை தீவன விதைகளான வேலிமசால், அசோலா, அகத்தி, சவுண்டால் கோ.4, கிளைரிசிடியா மற்றும் சந்தனம் மலைவேம்பு, மகோகனி, குமிழ்தேக்கு போன்ற வன மர விதைகளும் ஆய்வு பண்ணை முகவரியில் தொடர்பு கொண்டு நேரிலும் தபால்மூலமும் பெறலாம்.

Comments
Post a Comment