மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில் மா முக்கனிகளில் ஒன்று
மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில்
மா முக்கனிகளில் ஒன்று
மா முக்கனிகளில் ஒன்று
மா மரங்களில் பூக்கள் பராமரிப்பு
மா மரங்களில் பூக்களை பூக்க வைப்பதற்கு மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் காப்பது சற்று கடினமான காரியம். சாதாரணமாக மா மரங்கள் நவம்பர் கடைசி முதல் ஜனவரி இறுதி வரை பூக்கின்றன முதலில் பூக்க ஆரம்பிப்பது செந்தூரா ரகம் கடைசியில் பூப்பது நீலம் ரகம்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் செந்தூரா அடுத்து ,இமாம் பசந்த்,ரஸால்,அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா ஆகியவை பூக்கும்.
மாம்பூக்களில் இயற்கையாகவே உதிராமல் இருந்தால் 1% தான் நிற்கும், பிரச்சினை இருந்தால் அதற்கும் குறைவான பூக்கள் மட்டுமே பிஞ்சுகளாகும் . நமக்கு மகசூலும் குறையும்.
அல்போன்சா, இமாம்பசந்த்,பங்கனபள்ளி போன்ற ரகங்களில் 1% விட குறைவாகத்தான் பிஞ்சுகளாகும்
இரண்டாவது இயற்கையாகவே மரங்கள் பழங்களை தாங்கும் அளவுக்கு தான் காய்கள் நிற்கும். மாம் பூக்களை அதிகம் தாக்குவது தத்துப்பூச்சிகள் மற்றும் சூட்டிமோல்ட் என்ற சாம்பல் நோய்.
கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளிப்பதால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும், அரப்பு மோர் கரைசல் மற்றும் தேங்காய் பால் மோர் கரைசல் மாம்பூக்களின் மேல் தெளித்தால் அதிக பூக்கள் பிஞ்சுகளாகும்.
பூக்கள் ஆரம்பித்த பிறகு மரங்களின் வேரில் மேம்படுத்தப்பட ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் தண்ணீரில் கலந்து விடுவதால் பழங்களின் அளவு மற்றும் சுவை அதிகமாக இருக்கும்
மாமரங்கள் பூ எடுத்து கோலி அளவு வந்த பின்புதான் தண்ணீர் பாய்சவேண்டும். நன்றி ஸ்ரீதர் சென்னை.
தொடர்ந்து மற்றுமொரு விவசாயின் பகிர்வு
மா ரகங்கள்
இமாம்பசந்த், அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, பெங்களூரா மற்றும் காலப்பாடி ( இந்த ரகம் நான் கேள்விப்பட்டதில்லை கன்று எடுக்கும் போது சொன்னார் நல்லா இருக்கும்னு காய்த்த பின் தெரியும் ) , இது போன்று பல்வேறு ரகங்களை நடவு செய்வதால், ஆண்டு முழுவதும் நமக்கு அறுவடை இருக்கும். நீளம் ஏற்கனவே இருப்பதால் அதை நடவு செய்யவில்லை. மேற் கூறிய இந்த ரகங்கள் தான் தஞ்சை மருங்குள அரசு நர்சரியில் கிடைத்தது.
நடவு மூன்று வகையாக பிரிக்கலாம்
சாதரண நடவு, இடைவெளி 30க்கு*30 அடி
அடர் நடவு, இடைவெளி 15க்கு*15 அடி
உயர் அடர் நடவு, இடைவெளி 9க்கு*6 அடி
பொதுவா மூன்றுக்கு மூன்று அடி என்ற முறையில் நீள அகல ஆழத்திற்கு குழி எடுத்துக் கொள்ள சொல்வார்கள் நான் செய்தது 1*1க்கு அடி குழி தான் எடுத்தேன் கன்று வைக்கும் அளவுக்கு, தென்னைக்கு கூட அப்படி தான், பாலேக்கர் அய்யாவும் அதை தான் கூறிவருகிறார். மா கன்றை பீஜாமிர்தத்தில் சற்று மூழ்கி ( கவனம் தாய் மண் கரைந்திடாமல் ) குழியில் வைத்து கனஜீவாமிர்தம் மற்றும் மேல் மண் கலந்து குழியை மூடினேன், கன்று நடும் போது துணைக்கு குச்சி வைத்து கன்றோடு கட்டிவிடவும் காற்று அதிகமாக வீசும் போது கன்று சாய்ந்து விடாமல் இருக்க , மறக்காமல் கன்று வளர வளர துணை குச்சியின் கட்டு தளர்த்து கட்ட வேண்டும் காய்த்ததும் துணை குச்சியை அகற்றி விடலாம்.
அடர் நடவு என்பதால் நான் விட்ட இடைவெளி 12*12க்கு அடி, 9*6க்கு நடலாம் தோட்டக்கலை துறையினர் மூலம் சொட்டுநீர் போட்டதால் இடைவெளி மாறுபட மாறுபட மானிய தொகை மாறுபடும், அதாவது இடைவெளி குறைய குறைய மானிய தொகையும் குறையும்.
வாங்கி வந்த கன்றுகளை உடனே நடவு செய்து விடாமல்.. நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பையில் இட்டு, தோட்டத்தில் வழக்கமாக பாசனத்திற்குப் பயன்படுத்தும் அதே நீரைத் தெளித்து நிழலில் வைத்திருந்து, புதிய தளிர்கள் வரும் வரை காத்திருந்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கன்றுகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். ஆனால் எனக்கு நேரமின்மையின் காரணமாக உடனே நடவு செய்ய வேண்டி இருந்தது அதனால் சில கன்றுகளும் இறந்து விட்டன. தோட்டக்கலை துரையினர் மூலம் கன்றுகள் பெற்றதால் இழப்பு கன்றுகளுக்கு மறு வருடத்தில் தருவதாக கூறினார்கள், வாக்குறுதியோடு சரி, பல முறை கேட்டு பார்த்தும் கொடுத்தபாடில்லை.
பட்டம்
ஆடி, ஆவணி முதல் மார்கழி மாதம் வரை நடவு செய்யலாம். நடவு செய்வதற்கு ஒட்டுக்கன்றுகளைத் தேர்வு செய்வது நட்டால் மூன்றிலிருந்து நான்காண்டுக்குள் மகசூலுக்கு வரும்
நீர்
மா மரத்திற்கு நீர்த் தேவை குறைவு என்ற போதும் இளங்கன்றுகளாக இருக்கும் போது ஈரப்பதம் குறையாமல் கொடுத்துவர வேண்டும்.
ஊடு பயிர்
மா மரத்தில் ஊடுபயிராக 2 ஆண்டுகள் நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம். இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அறுவடை செய்ததும் அதன் செடிகளையே மாவுக்கு மூடாக்காகப் பயன் படுத்திடலாம். அல்லது மண்ணை வளப்படுத்த பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதிடலாம்.இயற்கை உரம்
மா நடவு செய்த முதல் ஆண்டு மண்புழு உரம், கம்போஸ்ட் [ ஊற்றமேற்றிய ] தொழுவுரம் உரக்கலவையை மரத்துக்கு ஒரு கிலோ வீதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வைக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில் மண்புழு உரம், கம்போஸ்ட் கலவையை இரண்டு கிலோவும் மூன்றாம் ஆண்டில் அடிப்பகுதியில் இருந்து ஒன்றரை அடி தள்ளி சிறிது குழியெடுத்து மூன்று கிலோ மேற் கூறிய உரக்கலவையினை போட்டு அதோடு மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். ஒவ்வொரு முறையும் உரம் வைக்கும் போது இது போன்றே மேல் மண்ணைப் போட்டு மூட வேண்டும், உரம் வைக்கும் போது ஈரப்பதம் அவசியம் இருக்க வேண்டும், தண்ணீரும் பாய்ச்சனும்.மண்புழு உரத்தில் உள்ள பதினாறு வகை நுண்ணுயிரிகள் வெயில்பட்டு செயல்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், மண் போட்டு மூடி விடுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு முழுமையாகக் கிடைக்கும். முதல் மூன்று ஆண்டுகளுக்கு இதேபோல் உரங்களைக் கொடுத்தாலே மண் வளமாகிவிடும். மாதந்தோறும் ஜீவாமிர்தம் / பஞ்சகவ்யம் தெளித்து வரவும்.
கவனிக்க – மேற் கூறியவை உரமிடுமுறை பொதுவானவை,
உதாரணம் :-
இரண்டு இட்லி சாப்பிடும் நபருக்கு 10 இட்லியும், 10 இட்லி சாப்பிடும் நபருக்கு இரண்டு இட்லியும் கொடுப்பது போன்றது தான் ஆக உங்கள் மண்ணிலுள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து உரமிடுவது சால சிறந்தது.
"மா' சாகுபடி முறை தொழிநுட்பம் ( CONTENTS )
ரகங்கள்வீரிய ஓட்டு ரகங்கள்
மண்ணும், தட்பவெப்ப நிலையும்
நிலம் தயாரித்தல்
ஓட்டுச் செடிகளை நடுதல் - இடைவெளி
பூச்சிகள்
அறுவடைக் காலம்
கேள்வி பதில்
அதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம்
ரகங்கள்
நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர் -1, அல்போன்சா, சிந்து.வீரிய ஓட்டு ரகங்கள்
பெரியகுளம் -1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.
மண்ணும், தட்பவெப்ப நிலையும்
நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நட ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டி, பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.ஓட்டுச் செடிகளை நடுதல் - இடைவெளி
ஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும். செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை (10 ஷ் 5 மீ) அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.செடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
மேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.
உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
ஒரு ஹெக்டருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை 0.2, மணி 0.2, சாம்பல் 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.
யூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங்களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.
வருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என்.ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சதவீதம் யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.
பூச்சிகள்
ஹெக்டருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் அல்லது கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.அசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.
அறுவடைக் காலம்
மார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம். ரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும்...🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿
Comments
Post a Comment