மியவாகி முறை மர நடவு
மியவாகி முறை மர நடவு
படத்தில் இருப்பது என்னவென்று இங்கும் இன்பாக்ஸிலும் கேள்விகள்.
வேறொன்றுமில்லை மியவாகி முறையில் மரம் நடவு செய்வதற்கு நிலத்தை பதப்படுத்தும் ஒரு நிலையே புகைப்படத்தில் காண்பது.
600 சதுரடியில் எவ்வாறு மியவாகி முறையில் மரங்களை நடலாம் என்பதை காண்போம் (100 சதுரடியிலும் இது சாத்தியமே)
10 அடி அகலம் 5 அடி ஆழம் மற்றும் 60 நீளத்திற்கு குழி எடுத்தபின் இரண்டு நாட்கள் வெப்பம் தனிய குழியை ஆறவிடவேண்டும் பின்னர் குழி முழுவதும் காய்கறி கழிவுகள் ( உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கும்) வாழை மட்டைகள் மற்றும் இலைகள் , தென்னையோலைகள் மற்றும் மாட்டுச்சாணம் கொண்டு நிரப்பவேண்டும்.( தென்னையோலைகள் ஒரு லேயர் அதன் மீது மண் ஒரு லேயர் காய்கறி கழிவுகள் ஒரு லேயர் பின்னர் மண் ஒரு லேயர் வாழைமட்டை மற்றும் இலைகள் ஒரு லேயர் மீண்டும் மண் ஒரு லேயர் என ஒவ்வொரு இயறக்கை கழிவுகளுக்கு மேலும் மண் கொண்டு நிரப்பவேண்டும் ) குழி முழுவதும் நிரம்பி வழியும் வரை தண்ணீர் விட வேண்டும். பின்னர் மண்ணைக்கொண்டு குழியை மூடிவிட வேண்டும். மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு பிறகு ஒரு அடியில் குறைந்தது 5 முதல் 7 வகையான 12 நாட்டு மர கன்றுகளை நெருக்கமாக நடவு செய்தல் வேண்டும். தேங்காய் நார்களை செடிகளின் இடையே நிரப்பிவிட்டு (ஈரப்பதத்தை நிலைநிறுத்த)வாய்ப்பு இருப்பின் சொட்டு நீர் அமைந்துவிட்டால் மரங்கள் குறைந்த தண்ணீர் செலவில் வேகமாக வளரும்.பஞ்சகாவியம் தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு சேர்ப்பது இன்னும் சிறப்பு
இயற்கையின் படைப்பில் மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் போட்டி, பொறாமை போன்ற குணங்களை விடுத்தது ஒன்றுக்கொன்று உதவி தானும் வளர்ந்து உடனிருப்போரையும் வளரச்செய்யும் அற்புதத்தை இந்த வகை நடவின் வாயிலாக மரங்கள் வளர வளர அறியலாம், பல வகை மரங்கள் ஒன்றோடு ஒன்று உறவாடி வளரும் காட்சி நிச்சயம் சீதோசனத்தில் மட்டுமல்ல மனித மனங்களிலும் ஒரு மாற்றத்தை ஏற்பதும் என்பதே நிதர்சனம்.
சிறிய இடத்தில பெரிய ஆக்ஸிஜன் தொழிற்ச்சாலையை சிறப்பாக இந்த முறையில் அமைக்கலாம் குறிப்பாக வளாக ஓரங்களில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெசர்வ்ட் சைட்கல், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என இவ்வாறான மியவாகி முறை மர நடவு பாதுகாப்பு மற்றும் மாசை குறைப்பதோடு அந்த பகுதியை இயற்கையாகவே வெப்பத்தில் இருந்து பெருமளவு காக்கும், ஏராளமான நுண்ணுயிர் மற்றும் பறவையினங்கள் வாழும் இருப்பிடமாக மாறும். இறை கடாட்சம் பெற்ற இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
மூங்கில், வேம்பு, தேக்கு , மகாகொனி, சரக்கொன்றை, அத்தி, பிய்யன் போன்ற மரங்கள் நடுவது சிறப்பு.
நான் அறிந்த விபரங்களை இங்கே தொகுத்துள்ளேன், இன்னும் இந்த முறை நடவுகளை செம்மைப்படுத்தும் வழிகள் இருந்தால் தெரியப்படுத்தலாம்

Comments
Post a Comment