Posts

Showing posts from June, 2017

நாட்டுக் கோழி வளர்ப்பு & பராமரிப்பு முறைகள்

Image
நாட்டுக் கோழி வளர்ப்பு & பராமரிப்பு முறைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது. குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும். வளர்க்கும் முறைகள் நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். கிராமப்புற...

கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறைகள்

கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறைகள் கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும்பு மட்டுமே சாகுபடி செய்யக் கூடாது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஒரு முறை கரும்பு சாகுபடி செய்தவுடன் அதை வெட்டி எடுத்த பிறகு ஒரு முறை கட்டை கரும்புக்குப் பின் அந்த நிலத்தில் மாற்றுப் பயிர் ஒன்றை சாகுபடி செய்ய வேண்டும். அதன் பின்னரே கரும்பை மீண்டும் பயிரிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, மஞ்சள், நிலக்கடலை, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை கரும்பு சாகுபடி செய்யும் நிலங்களில் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்யலாம் என்றும் வேளாண் துறை யோசனை தெரிவித் துள்ளது. நிலம் தயாரித்தல் ஓராண்டுப் பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ. ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும். டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும். மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால்,...

தக்காளி பயிர் பாதுகாப்பு

தக்காளி பயிர் பாதுகாப்பு  பாதுகாப்பு முறைகள் களை நிர்வாகம் நாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும். அதன்பிறகு களை எடுக்க வேண்டியது இல்லை. பயிர் பாதுகாப்பு காய்ப்புழு மற்றும் புரொடீனியாப் புழு இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்கவேண்டும், வளர்ந்த புழுக்களையும் அழிக்கவேண்டும். காய்ப்புழுவிற்கு என்.பி.வி வைரஸ் கலவை தெளிக்கவேண்டும். புரொடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும். வேர் முடிச்சு நூற்புழு கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இடவேண்டும். இலைச்சுருட்டு நச்சுயிரி நோய் இந்நோய் தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெ...

மாடித்தோட்டம்வீட்டுத்தோட்டம்

மல்லிகை மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம் தேவையான_பொருட்கள் 1. 50லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம். 2. அடியுரமாக இட மண்/செம்மண், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம்,(தேவையெனில்) , வேப்பம் பிண்ணாக்கு, மாட்டூட்டம். 3. பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் 4. நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான் 5. கவாத்து உபகரணங்கள் தொட்டிகள் 🍀 செடிகள் வளர்ப்பதற்காக டிரம்களில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது. 🍀 இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் என மூன்றையும் சம அளவில் கலந்து வைக்க வேண்டும். 🍀 இது நீண்ட கால செடி என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்ப்பது சிறந்தது. அப்பொழுது தான் மண் இலகுவாக செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும். விதைத்தல் 🍀 பதியன்களை அருகில் இருக்கு நாற்று பண்ணைகளில் வாங்கிக்கொள்ளவும் பதியன்களை தொட்டியின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். வேர்ப்பகுதி முழுவதும் மறையும் படி நடவு செய்ய வேண்டும். நீர்_நிர்வாகம் 🍀 நட்டவுடன் நீர் தெளிக்க வேண்ட...

மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை தாவரவியல்

மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை தாவரவியல் வேர் தென்னையின் வேர் சல்லி வேராகும். இவை அடி மரத்திலிருந்து தொடர்ந்து உருவாகும். இதில் ஆணி வேர் மற்றும் வேர்முடிகள் கிடையாது. ஆனால் மிக அதிக அளவு சிறு வேர்களைக் கொண்ட முதன்மை வேர்கள் காணப்படும். அடிமரத்திலிருந்து வளரும் இதன் முக்கிய வேர்கள் கிடை மட்டத்தில் வளரக் கூடியவை. இந்த வேர்கள் பெரும்பாலும் மேல்மட்ட மண்ணில் காணப்படும். இதன் முக்கிய கிளை வேர்கள் மிக ஆழத்திற்கு செல்லக் கூடியவை. தென்னையின் வேரில் கேம்பியம் திசு கிடையாது. சமச்சீரான இந்த முதன்மை வேரின் விட்டம் சுமார் ஒரு மீட்டராகும். இந்த வேரின்நுனிகள் மிக வேகமாக வளரக் கூடியவை. இவை துடிப்பான உறுஞ்சு வேர்களாகும். மிக மெல்லிய செல்சுவரை உடைய எபிடெர்மிஸ் செல்கள் ஓர் அடுக்கில் காணப்படும். இவை வளர வளர கடினமாகவும் ஊடுருவும் தன்மையற்றும் காணப்படுகிறது. முதிர்ந்த வேரில் உள்ள எபிடெர்மிஸ் பகுதி சிதைந்து சிவப்பு நிறமுள்ள ஹைப்போடெர்மிஸ் பகுதியை தருகிறது.   தென்னை வேர் அமைப்பு மேலே செல்க தண்டு இதன் தண்டு அடிமரம் என அழைக்கப்படும். இது பக்க கிளைகளற்ற உருண்டை (அ) உருளை வடிவ பருத்த தடிம...

மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில் மா முக்கனிகளில் ஒன்று

மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில்  மா முக்கனிகளில் ஒன்று மா மரங்களில் பூக்கள் பராமரிப்பு மா மரங்களில் பூக்களை பூக்க வைப்பதற்கு மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் காப்பது சற்று கடினமான காரியம். சாதாரணமாக மா மரங்கள் நவம்பர் கடைசி முதல் ஜனவரி இறுதி வரை பூக்கின்றன முதலில் பூக்க ஆரம்பிப்பது செந்தூரா ரகம் கடைசியில் பூப்பது நீலம் ரகம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் செந்தூரா அடுத்து ,இமாம் பசந்த்,ரஸால்,அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா ஆகியவை பூக்கும். மாம்பூக்களில் இயற்கையாகவே உதிராமல்  இருந்தால் 1% தான் நிற்கும், பிரச்சினை இருந்தால் அதற்கும் குறைவான பூக்கள் மட்டுமே பிஞ்சுகளாகும் . நமக்கு மகசூலும் குறையும். அல்போன்சா, இமாம்பசந்த்,பங்கனபள்ளி போன்ற ரகங்களில் 1% விட குறைவாகத்தான் பிஞ்சுகளாகும் இரண்டாவது இயற்கையாகவே மரங்கள் பழங்களை தாங்கும் அளவுக்கு தான் காய்கள் நிற்கும். மாம் பூக்களை அதிகம் தாக்குவது தத்துப்பூச்சிகள் மற்றும் சூட்டிமோல்ட் என்ற சாம்பல் நோய். கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளிப்பதால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும், அரப்பு மோர் கரைசல் மற்றும...

வறட்சியில் வளம் தரும் கால்நடைத் தீவனம் வேலி மசால்

Image
வறட்சியில் வளம் தரும் கால்நடைத் தீவனம் வேலி மசால் ஆடு, மாடு, குதிரை, முயல், எருமை போன்றகால்நடைகளுக்கு புரதச்சத்தும், அதிக சீரான சக்தியும் கொண்ட பசும் தீவனப்பயிராக வேலி மசால் பயன்படுகிறது. இதன் காரணமாக கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்களும் விவசாயிகளும் வறட்சியைத் தாங்கி வளர்ந்து வளம் தரக் கூடிய வேலி மசால் பயிர் செய்வது லாபகரமானதாக அமையும். ஒரு முறை பயிர் செய்தால் பல ஆண்டுகளுக்கு (பல தலைமுறைகளுக்கு) திரும்ப திரும்ப 40 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். நீர் பாசன வசதி இல்லாத மானாவாரி நிலங்களிலும் மழை காலங்களில் விதைத்து வளர்க்கலாம். மழை இல்லாத வறட்சி காலங்களில் வளர்ச்சி இல்லாத மானாவாரி நிலங்களிலும் மழை காலங்களிலும் விதைத்து வளர்க்கலாம். மழைஇல்லாத வறட்சி காலங்களில் வளர்ச்சி இல்லாவிட்டாலும் வேலி மசால் காய்ந்து போவது இல்லை. மீண்டும் சிறு மழை பொழியும் போது கூட கொழுக் கட்டை புள்ளினைப் போல பசுமை கட்டி வளரக் கூடியது. நீர்பாசன வசதி உள்ள நிலங்களில் 40 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம் குறைந்த நீர்வளம் உள்ள நிலங்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் அமைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பாச...

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும்..!!

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும்..!! மடி வீக்க நோய் (Mastitis): ********** கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்)மஞ்சள் பொடி-50 கிராம்சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு) சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு) மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும். வயிறு உப்புசம் (Bloat): ********* கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுப...

‘கோ 5’ & வேலி மசால்’ - ஆடு, மாடுகளின் ‘அல்வா’!

‘கோ 5’ &  வேலி மசால்’ -  ஆடு, மாடுகளின் ‘அல்வா’! தமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ‘கறப்பது கால் படி; உதைப்பது பல்லுப்போக…’ எனக்கூறுவதற்கு ஏற்ப கறவை மாடுகளுக்கு வைக்கோல், பருத்திக்கொட்டை வாங்கும் செலவு மும்மடங்காகி விட்டது. போதுமான சத்தான தீவனம் கிடைக்காததால் பசு மாடுகளின் பால் கறவை குறைந்து விட்டது. கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் பலர் விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்கான தீவன பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் நரியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.பூமிநாதன். இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கால்நடை தீவன ரகத்தை சேர்ந்த ‘கோ 5’ மற்றும் ‘மசால் வேலி’ ஆகிய பசுந்தீவனம் வளர்க்கிறார். தினமும் தேவைக்கு ஏற்ப பசுந்தீவனத்தை வயலில் இருந்து அறுவடை செய்து பசுக்கள், ஆடுகளுக்கு கொடுப்பதால், அவற்றை விரும்பி உண்ணும் பசுக்கள் பால் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. கோடையில் தீவன பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.பூமிநாதன் கூறியதாவது: மதுரையில் முதல் முறையாக ...

கன்று பிறந்தவுடன் கவனிக்க வேண்டியது..!!

கன்று பிறந்தவுடன் கவனிக்க வேண்டியது..!! 🐃 தாய்பசு கன்றினை ஈன்றவுடன், பசுவானது கன்றினை நக்கி சுத்தம் செய்யும். அவ்வாறு பசு செய்யவில்லை எனில் சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். கன்றினை நன்கு துடைத்து உலர்த்த வேண்டும். 🐃 கன்று மூச்சு விட திணறினால் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தில் சற்று அழுத்தி விட வேண்டும். இதனால் கன்றுகள் எளிதாக சுவாசிக்க ஆரம்பிக்கும். 🐃 வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம். 🐃 பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். 🐃 அதன் கீழ் 1 செ.மீ விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். 🐃 தொப்புள் கொடியை கத்தரித்த இடத்தில் உடனே டிஞ்சர் அயோடின் தடவி விட வேண்டும். 🐃 பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. 🐃 சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் இம்முனோ...

துன்பங்களில் இருந்து விடுபட உதவும் பைரவர் பரிகாரம்

துன்பங்களில் இருந்து விடுபட உதவும் பைரவர் பரிகாரம்  தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிகிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். கோவில் நடை திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது. இதை செய்ய முடியாதவர்கள் தினமும் விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம். அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம். பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி, அணைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர், மேலும் சனி பகவானுடைய குரு. 🙏🙏🙏             ...

பசு பற்றி 50 தகவல்கள்

பசு பற்றி 50 தகவல்கள்  1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். 3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார். 4. கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். 5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை. 6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும். 7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். 8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. 9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 10. பசுவுக்கு தின...

மருந்துகள் உண்ணும் முறை

மருந்துகள் உண்ணும் முறை  மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். * காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து குடிங்க; பாருங்க, இரண்டு மாதங்களில் தொப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். * இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும். * அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இ...

முலாம்பழம் சாகுபடி

Image
முலாம்பழம் சாகுபடி  முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் - சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெல்லி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை, முட்டை வடிவத்தில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இப்பழம் உடலை குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. சாகுபடி நுட்பங்கள்: நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண் ஏற்றது. 6 - 7.5 அமில காரத் தன்மையுள்ள மண்ணில் நன்கு வளரும். முலாம்பழம் நன்கு வளர்வதற்கு அதிக சூரிய ஒளி, குறைவான ஈரப்பதம், உறைபனி இல்லாத மிதமான வறண்ட சூழ்நிலையும் தேவை. 23-27டி. செல்சியஸ் வெப்பநிலை ஏற்றது. முக்கிய ரகங்கள்: அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன், துர்காபுரா மாது, ஜாப்நா 96-2 மற்றும் பஞ்சாப் ரசிலாஹெரி. அர்க்கா ராஜ்கான்ஸ் ரகம் உருண்டை வடிவமுள்ள காய்களைக் கொண்டது. காய்களின் மேற்பரப்பில் வலைகள் நன்றாக தெரியும். இவை வெள்ளை நிறத்திலு...

கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றிற்கான முதலுதவியும்

கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றிற்கான முதலுதவியும் 🐄 கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கால்நடைகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்படும் பொழுது மருத்துவரை தான் அணுக வேண்டியுள்ளது. 🐄 எனவே கால்நடைகள் வைத்துள்ள அனைவரும், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அவற்றிற்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். 🐄 மருத்துவர் வரும்வரை காத்திருக்காமல் கால்நடைகளுக்கு நம்மால் முடிந்த அளவு சிகிச்சை அளிப்பது மிகவும் நல்லது. 🐄 கால்நடைகளுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளை பார்ப்போம். கண்ணில் நீர் வடிதல் : 🐄 சில கால்நடைகளுக்கு திடீரென கண்ணில் இருந்து நீர் வடியும். தூசி அல்லது முள் போன்றவை கண்ணில் விழுந்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 🐄 நீர் வடிவதை நிறுத்துவதற்கு சுத்தமான விளக்கெண்ணெய் இரண்டு துளிகள் விட வேண்டும். இதனால் எரிச்சல் மற்றும் நீர் வடிதல் குறையும். 🐄 மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவர் வரும் வரை சுத்தமான துணியை கொண்டு கண்களை...

புதினா சாகுபடி முறை

Image
புதினா சாகுபடி முறை புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது. மண் வகைகள் வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும். நீர் மற்றும் உர மேலாண்மை புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். புதினாவிற்கு தொழு உரத்தை தவிர வேறு உரங்கள் தேவையில்லை. ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிடவேண்டும். அறுவடை 60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம்...

இலுப்பை (Bassia longifolia)

Image
இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia)  இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இலுப்பை மரம் வெப்ப மண்டல மரவகையைச் சேர்ந்தது. கோடைகாலத்தில் இலையை உதிர்த்து விடும். சப்போட்டா தாவரத்தின் குடும்பத்தை சேர்ந்தது. இலைகள் சப்போட்டா இலையை ஒத்திருக்கும். நூறு அடிக்குமேல் வளரக்கூடியது. சப்போட்டா குற்று செடி அல்லது குற்று மர வகையைச் சேர்ந்த்து, ஆனால் இலுப்ப மிக உயரமாக வளரும். மரத்தின் உள்பாகம் மிகவும் உறுதி உடையது. குளக்கரையிலும் தரிசு நிலங்களிலும் இலுப்பையை நட்டு வளர்க்க முடியும் .மழைநீர் பூமிக்கு கொண்டு வருவதில் இலுப்பை மரங்கள் நமக்கு உதவுகிறது இந்த மரங்கள் அதிகமாக பொது இடங்கள் உள்ள இடத்தில் நடவு செய்யுங்கள். மரங்கள் நிழலை மட்டும் தருவதில்லை. மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் சுவாசிக்க பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன.  இதுமட்டுமா, புவி வெப்பத்தைக் குறைத்து மழையைத் தருவிக்கின்றன. கண்மாய், ஏரி, குளம், கரைகளிலும், பூங்கா போன்ற இடங்களிலும் சாலை ஓரங்களிலும் பரந்து விரிந்து காணப்படும் மரம்தான் இலுப்பை. இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க...

நன்னீர் முத்து வளர்ப்பு

நன்னீர் முத்து வளர்ப்பு முத்து என்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய விலை உயர்ந்த பொருள் (ரத்தினம், மாணிக்கம் போன்றது). இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முத்துக்கு தேவை அதிகம். அளவுக்கு மீறின பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் இயற்கையில் முத்து கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளர்ப்பு முத்துக்களை இறக்குமதி செய்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்துவருகிறது. புவனேஷ்வரிலுள்ள மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் – நன்னீரில் முத்து வளர்ப்பது குறித்த தொழில்நுட்பத்தை உருவாக்கி நாடு முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளது. இயற்கையில் வெளியிடத்துப் பொருள் ஒன்று அதாவது, மண் துகள், பூச்சிகள் போன்றவை, சிப்பி உடம்பினுள் சென்று, வெளிவராமல் இருக்க, சிப்பியானது அவ்வெளிப் பொருளின் மேல் ஒரு பளபளப்பான பகுதியை உருவாக்குகிறது. இதனால் முத்து உருவாகிறது. இதுதான் முத்து வளர்ப்பிலும் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும். முத்து என்பது, சிப்பியின் உள் ஓட்டுக்குள் காணப்படும் பளபளப்பான பகுதிக்கு இணையானது. இதனை முத்துப் பகுதிகளின் தாய் என்றும் அழை...

கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்

கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்!!!! கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஈரோடு கால்நடை மருத்துவப் பல்கலைப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியை நா.வீ.கவிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்று ஈன்ற கறவை மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கருப்பை வெளித்தள்ளுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்கள் உருவாகின்றன. நஞ்சுக்கொடி: ***** மாடுகள் சினையாக இருக்கும்போது கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு தேவையான உணவு மற்றும் பிராண வாயுவை அளிப்பதுடன் சிசுவின் கழிவுப்பொருள்களை அகற்றும் உறுப்பாக செயல்படுவது நஞ்சுக்கொடி ஆகும். பொதுவாக கன்று ஈன்ற 3 முதல் 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாகவே வெளித்தள்ளப்பட்டு விழுந்துவிடும். இதற்கு மேலும் அதாவது 8 முதல் 12 மணி நேரம் கழிந்தும் கூட நஞ்சுக்கொடி விழாமலிருந்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும். சில விவசாயிகள் கன்று ஈன்ற மாடு நஞ்சுக்கொடி போடும் வரை பாலில் நச்சுத்தன்மை இருக்கும் என நினைத்துக்கொண்டு சீம்பாலினைக் கறக...

கோமாரி நோய்

கோமாரி நோய் இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு !!!! வெந்தயம், சீரகம் தலா 100 கிராம் எடுத்து, 100 மில்லி நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி நன்றாக அரைக்க வேண்டும். இவற்றுடன் பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து குழம்பாக அரைக்க வேண்டும். இவற்றுடன் துருவியத் தேங்காயைச் சேர்த்து உருண்டையாக்க வேண்டும். இந்த மூலிகை மருந்து உருண்டையை கால்நடைகள் சாப்பிடும் வகையில், அதன் வாயை அகலமாக விரித்து, கடவாய் பல்லில் தடவ வேண்டும். இந்த உருண்டை உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். இதேபோல, 3 மணி நேரத்துக்கு ஒரு முறை புதியதாகத் தயார் செய்த மருத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 5 முறை கொடுக்க வேண்டும். தொடர்ந்து, 3 முதல் 5 நாள்கள் வரை இந்த மூலிகை மருந்தை கொடுப்பதன் மூலம் 100% கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். கால் புண்: ----------------- காலில் புண் இருந்தால், குப்பைமேனி, காட்டுத் துளசி அல்லது திருநீற்றுப் பச்சை செடிகளில் ஏதேனும் ஒரு செடியின் 100...

துளசியின் மருத்துவ குணங்கள்

துளசியை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்களை பற்றி... துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு  தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். * துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை  நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. * 1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து,  காய்ச்சலை விரைவாக குறைக்கிறது. * துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து,  இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது. * சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. * துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது ச...

வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில்  உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு,  குடல்புண்ணையும் ஆற்றும். பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். இதனுடன் சர்க்கரை சேர்த்து  சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு  உண்டு...

மியவாகி முறை மர நடவு

Image
மியவாகி முறை மர நடவு  படத்தில் இருப்பது என்னவென்று இங்கும் இன்பாக்ஸிலும் கேள்விகள். வேறொன்றுமில்லை மியவாகி முறையில் மரம் நடவு செய்வதற்கு நிலத்தை பதப்படுத்தும் ஒரு நிலையே புகைப்படத்தில் காண்பது. 600 சதுரடியில் எவ்வாறு மியவாகி முறையில் மரங்களை நடலாம் என்பதை காண்போம் (100 சதுரடியிலும் இது சாத்தியமே) 10 அடி அகலம் 5 அடி ஆழம் மற்றும் 60 நீளத்திற்கு குழி  எடுத்தபின் இரண்டு நாட்கள் வெப்பம் தனிய குழியை ஆறவிடவேண்டும் பின்னர் குழி முழுவதும் காய்கறி கழிவுகள் ( உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கும்) வாழை மட்டைகள் மற்றும் இலைகள் , தென்னையோலைகள் மற்றும் மாட்டுச்சாணம் கொண்டு நிரப்பவேண்டும்.( தென்னையோலைகள் ஒரு லேயர் அதன் மீது மண் ஒரு லேயர் காய்கறி கழிவுகள்  ஒரு லேயர் பின்னர் மண் ஒரு லேயர் வாழைமட்டை மற்றும் இலைகள் ஒரு லேயர் மீண்டும் மண் ஒரு லேயர் என ஒவ்வொரு இயறக்கை கழிவுகளுக்கு மேலும் மண் கொண்டு நிரப்பவேண்டும் ) குழி முழுவதும் நிரம்பி வழியும் வரை தண்ணீர் விட வேண்டும். பின்னர் மண்ணைக்கொண்டு குழியை மூடிவிட வேண்டும். மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு...

இயற்கை மருந்துகள் பயிரைக் காக்கும்

இயற்கை மருந்துகள் பயிரைக் காக்கும் இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.  விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை. ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.  எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண...

கால்நடை கழிவுகளின் பயன்கள்

கால்நடை கழிவுகளின் பயன்கள்   ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் பாலை விட விலை அதிகம் . அதனால் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது பயன் தராது . அதை விட விலை மதிப்பிலா ஒரு பொருளை கால்நடைகள் தருகின்றன . அவை சாணம் மற்றும் கோமியம் . நாம் செய்ய வேண்டியது … 1) சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைத்து கொடுப்பது ( சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும் ) 2) சாணமும் கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்குமாறு செய்யவேண்டும் 3)கோமியத்தை கம்பி வலை தடுப்பு அமைத்து பிரித்து எடுத்து கொண்டு பஞ்ச காவ்யா மற்றும் இயற்கை பூச்சிகொல்லி மருந்து செய்ய பயன் படுத்திக்கொள்ளலாம் . 4) சாணத்தை கோபர் gas தயாரிக்க பயன்படுத்தவும் . அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் முடியும் . 5) கோபர் gas தயாரித்த பின் , மிச்சம் உள்ள sludge ஐ மண்புழு உரம் தயாரிக்க பயன் படுத்தவும் . 6) கோபர் gas தயாரிக்க பயன்படுத்தப்படும் tank இல் பழைய காப்பர் wire மற்றும் பழைய இரும்பு ஒன்றை போட்டு வைக்கவும் . sludge ஐ மண்புழு உறதிர்க்காக எடுத்த வுடன் மீதமிருக்கும் slurry ...