இந்த ஒரே ஒரு ஜூஸ் உங்களுக்கு உண்டாகும் விட்டமின் சி குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும்!

இந்த ஒரே ஒரு ஜூஸ் உங்களுக்கு உண்டாகும் விட்டமின் சி குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும்!


இந்த இயற்கை ஜூஸை தினமும் குடிப்பதனால்இ, வைட்டமின் சி குறைபாட்டினை சரி செய்ய நன்கு உதவும். வைட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும்.

எனவே, வைட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று வைட்டமின் சி. உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

ஆரஞ்சு ஜூஸ் - 1/2 டம்ளர்
கிவி ஜூஸ் - 1/2 டம்ளர்
மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்

கொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமான வைத்துககொள்ள உதவும். மிளகுத தூள் உடலில் வைட்டமின் சி யை ஈர்த்துக்கொள்ள உதவக்கூடியது.

Comments

Popular posts from this blog

வறட்சியில் வளம் தரும் கால்நடைத் தீவனம் வேலி மசால்

பசு பற்றி 50 தகவல்கள்

மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில் மா முக்கனிகளில் ஒன்று