மாடித்தோட்டம்வீட்டுத்தோட்டம்

மல்லிகை மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம்


தேவையான_பொருட்கள்


1. 50லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்.

2. அடியுரமாக இட மண்/செம்மண், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம்,(தேவையெனில்) , வேப்பம் பிண்ணாக்கு, மாட்டூட்டம்.

3. பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள்

4. நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

5. கவாத்து உபகரணங்கள்

தொட்டிகள்


🍀 செடிகள் வளர்ப்பதற்காக டிரம்களில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

🍀 இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் என மூன்றையும் சம அளவில் கலந்து வைக்க வேண்டும்.

🍀 இது நீண்ட கால செடி என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்ப்பது சிறந்தது. அப்பொழுது தான் மண் இலகுவாக செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

விதைத்தல்


🍀 பதியன்களை அருகில் இருக்கு நாற்று பண்ணைகளில் வாங்கிக்கொள்ளவும் பதியன்களை தொட்டியின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். வேர்ப்பகுதி முழுவதும் மறையும் படி நடவு செய்ய வேண்டும்.

நீர்_நிர்வாகம்


🍀 நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

🍀 தென்னை நார்க்கழிவு இருப்பதால் ஈரப்பத்தை கண்காணித்து நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்


🍀 வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

🍀 செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.

🍀பொதுவாக பிண்ணாக்கு வகைகள் பூ வளர்சியை அதிகம் பெருக்கும் பிண்ணாக்கு கிடைக்குமாயின் உரமாக பயன்படுத்தலாம்!
(அ)தேங்காய் பால்+புளித்த தயிரை சம அளவு கலந்து ஒருவாரம் புளிக்க வைத்து 1:10 என்ற அளவில் தண்ணீர் கலந்து பூ வைக்கும் பருவத்தில் தெளிக்கலாம்!

பாதுகாப்பு_முறைகள் 


🍀 வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட்டு நீர் ஊற்ற வேண்டும்.

🍀 பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். (10 நாள் இடைவெளியில்)

🍀 செடிகளின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் பக்கக்கிளைகள் தோன்றும்.

பயன்படுத்தும்_இடங்கள் 


🍀 இதன் தொட்டியை சுவற்றின் அருகில் சிறு கற்களை இட்டு அதன் மீது வைக்க வேண்டும். அப்பொழுது தான் செடிகளை சுவற்றின் மீது படர விட ஏதுவாக இருக்கும்.

🍀 இதன் வாசனையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் வாசனையை நுகரும் பொழுது மனதிற்கு ஒரு வித உற்சாகம் கிடைக்கும்.

🍀 தொட்டியை ஜன்னல் அருகில் வைப்பதால் இதன் வாசனை நாள் முழுவதும் வீட்டில் பரவி இருக்கும்.

குறிப்பு: தொட்டியில் இல்லாமல் தரையில் வளர்க்க நினைப்பவர்களும் தரையில் ஆழமாக குழி தோன்டி,இதே முறையை பின்பற்றலாம்!)

Comments

Popular posts from this blog

வறட்சியில் வளம் தரும் கால்நடைத் தீவனம் வேலி மசால்

பசு பற்றி 50 தகவல்கள்

மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில் மா முக்கனிகளில் ஒன்று