கன்று பிறந்தவுடன் கவனிக்க வேண்டியது..!!
கன்று பிறந்தவுடன் கவனிக்க வேண்டியது..!!
🐃 தாய்பசு கன்றினை ஈன்றவுடன், பசுவானது கன்றினை நக்கி சுத்தம் செய்யும். அவ்வாறு பசு செய்யவில்லை எனில் சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். கன்றினை நன்கு துடைத்து உலர்த்த வேண்டும்.
🐃 கன்று மூச்சு விட திணறினால் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தில் சற்று அழுத்தி விட வேண்டும். இதனால் கன்றுகள் எளிதாக சுவாசிக்க ஆரம்பிக்கும்.
🐃 வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.
🐃 பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும்.
🐃 அதன் கீழ் 1 செ.மீ விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும்.
🐃 தொப்புள் கொடியை கத்தரித்த இடத்தில் உடனே டிஞ்சர் அயோடின் தடவி விட வேண்டும்.
🐃 பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
🐃 சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் இம்முனோ கிளாபுலின் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.
🐃 பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அதன் வளர்ச்சி சீராக இருக்கும்.
🐃 கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
🐃 சீம்பால் கிடைக்காத நிலையில் இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம்.
🐃 சீம்பால் இல்லாத பட்சத்தில் முட்டை ஒன்று, தண்ணீர் 300 மிலி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால் 500 மிலி ஆகியவற்றை கலந்து ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் அளிக்க வேண்டும்.
🐃 இது கன்றுகள் வளர்வதற்கு தேவையான உந்துதலை அளிக்கும். சீம்பால் கிடைக்கும் பட்சத்தில் இதை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
Comments
Post a Comment