தினம் ஒரு தீவனம் - சூப்பர் நேப்பியர்
தினம் ஒரு தீவனம் - சூப்பர் நேப்பியர்
ஒரு கரணையின் விலை ₹.1.50 பைசா மொத்தமாக(5000 மேல்) எடுக்கும் போது.
ஒரு ஏக்கருக்கு 10,000/- கரணைகள் தேவைப்படும்.
3 அடி X 3 அடி என்ற அளவில் சாகுபடி செய்ய வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது தூர்கள் அதிகமாவும் மற்றும் உயரம் பத்து அடி வரை வளர்கிறது.
முதல் அறுவடை 70 - 80 நாட்கள். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள்.
ஆண்டொன்றுக்கு ஒரு ஏக்கர் பரப்பில் 200 மகசூல் தரும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது 8 -10 ஆண்டுகளுக்கு மறு தாம்பு செய்யலாம்.
கோ4 & கோ5 ரகங்களை காட்டிலும் இதில் புரதச்சத்து 50% கூடுதலாக இருப்பதால் கால்நடைகளுக்கு உகந்தது மற்றும் இவை இரு மடங்கு விளைச்சல் தரும்.
பொதுவாக கோ4 & கோ5 கரணைகள் 2 X 2 அடி அளவில் நடவு செய்ய வேண்டும். அப்போது விதை கரணைகள் 15 ஆயிரம் தேவைப்படும். ஆனால் நாம் சூப்பர் நேப்பியர் ஒட்டு ரக புல் கரணைகளை 3 X 3 அடி அளவிலௌ சாகுபடி செய்து ஆண்டொன்றுக்கு 200டன் தீவனத்தை பெற இயலும்.
இதில் குளுக்கோஸ் அளவு கூடுதலாக இருப்பதால் கால்நடைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.
இந்த புல் ரகம் இனிப்பு சுவை கௌண்டுள்ளதால் கால்நடை விரும்பி உண்ணுகின்றன.
ஒரு ஏக்கர் தீவன சாகுபடியில் 20-25 நாட்டு ரக மாடுகளையும் மற்றும் 30 - 40. ஆடுகளையும் பராமரிக்கலாம்.
மீதமாகும் இத்தீனப்புல்லைகளை ஊறுகாய் புல் சைலேஜ் தயாரித்து கால்நடைகளுக்கு அளிக்கலாம். சுவையும் சத்தும் குறையாமல் காணப்படுகிறது.
இதை தொடர்ச்சியாக சாப்பிடும் கால்நடைகளின் பால் திடமாகவும் மற்றும் 10% -15% கூடுதலாகவும் கிடைக்கிறது.
மொத்தத்தில் சூப்பர் நேப்பியர் கால்நடை வளர்போருக்கான சிறந்த தீவனப்புல் என்றால் மிகையாகாது.
Comments
Post a Comment