Posts

Showing posts from July, 2017

உடலுக்கு ஆரோக்கியம் தருபவை

Image
உடலுக்கு ஆரோக்கியம் தருபவை மழைக்காலங்களில் துளசி இலையை தேநீர்போல காய்ச்சிக் குடித்துவந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்றவை வராது. இலைக் கஷாயம் குடித்தால், தொண்டைப்புண் சரியாகும். இதன் இலைச்சாற்றுடன் கற்பூரவல்லி இலைச்சாறு சேர்த்துச் சூடாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்புச்சளி, மூச்சுவிட முடியாமை, மூச்சுத்திணறல் சரியாகும். குறிப்பாக மார்புச்சளி வெளியேறும். இந்த இலைச்சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சம அளவு சேர்த்து தேன் கலந்து, தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டால், நரம்புத்தளர்ச்சி நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலை இரண்டையும் சம அளவு எடுத்து 50 மி.லி சாற்றில் இரண்டு சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வேண்டும். இதை 48 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும். இதைச் சாப்பிடும்போது உப்பு, புளி, காரம் சேர்க்கக் கூடாது. இதன் இலைச் சாற்றுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துச் சூடாக்கி தேன் கலந்து உணவுக்குப் பின்னர் உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும். இலைகளை பிட்டவியலாக அவித்து, பிழிந...

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும். இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:   1.   பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.   2.   சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.   3.   பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.   4.   பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.   5.   மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)   பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:   1.   சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்   2.   நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்   3.   நல்ல பயிர் மேலாண்மை   4.   பயிற...

இந்த ஒரே ஒரு ஜூஸ் உங்களுக்கு உண்டாகும் விட்டமின் சி குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும்!

Image
இந்த ஒரே ஒரு ஜூஸ் உங்களுக்கு உண்டாகும் விட்டமின் சி குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும்! இந்த இயற்கை ஜூஸை தினமும் குடிப்பதனால்இ, வைட்டமின் சி குறைபாட்டினை சரி செய்ய நன்கு உதவும். வைட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும். எனவே, வைட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று வைட்டமின் சி. உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும். ஆரஞ்சு ஜூஸ் - 1/2 டம்ளர் கிவி ஜூஸ் - 1/2 டம்ளர் மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன் கொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும். ஆரஞ்சு மற்றும் கிவி பழ...

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!!

Image
கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!! முடி அடர்த்தியாக வருவதற்கு பூண்டு தோல் நல்ல பலனைத் தரும். கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைக்க வேண்டும். இதனை மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, தலையில் அதிக சொட்டையுள்ள இடத்தில தடவிவர வேண்டும். இபப்டி செய்தல முடி அடர்த்தி பெற்று விரைவில் புதிய முடிக்கற்றைகள் வளரும். கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையாக அரைத்து, அதனுடன் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதனைதினமும் சிறிது தேய்த்து வந்தால் நரைமுடி கருப்பாக மாறிவிடும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் இள நரை பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். செய்வதற்கு எளிதுதானே. அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இந்த ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இவற்றை விட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சுங்கள். இதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் சகல முடி பிரசனைகளும் நரையும் குணமாகும். செம்பருத்தி பூ -...

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்ய உதவும் உணவு முறைகள்!

Image
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்ய உதவும் உணவு முறைகள்! சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும். உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம்  அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு போன்றவற்றை சேர்த்து கொள்ளவும். உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள  பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்கலாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4  மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்கலாம். பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும்  பால் பொருட்கள் தவிர்க்கவும். புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள்  புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத  பொருளாகும். நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமு...

அவல் உப்புமா செய்ய வேண்டுமா...?

Image
அவல் உப்புமா செய்ய வேண்டுமா...? தேவையானவை: அவல் - ஒரு கப் வெங்காயம் - ஒன்று கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - சிறிதளவு மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,  காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். பிறகு,  கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

Image
🍚🍲 *அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு ⭕ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய் ⭕ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம் ⭕ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி ⭕ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும் ⭕பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும் ⭕ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும் ⭕ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும். ⭕ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும் ⭕ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும். ⭕ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும் ⭕ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும் ⭕ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும். ⭕ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும். ⭕ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும். ⭕ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் க...
Image
ஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா...? ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக்  கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக்  கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ. ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும். ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும். ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவ...

முகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும் அற்புத மருத்துவ குணம் அடங்கிய கற்றாழை!

Image
முகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும் அற்புத மருத்துவ குணம் அடங்கிய கற்றாழை! முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி தீர்வு கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம்  பொலிவு பெறும். தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை  கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் ...

தினமும் ஒரு கொய்யா எடுத்து கொண்டால் என்ன பயன் தெரியுமா?

Image
தினமும் ஒரு கொய்யா எடுத்து கொண்டால் என்ன பயன் தெரியுமா? உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள். இதில் நிறைந்துள்ள சத்துக்களைப் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள். கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். குழந்தைகளுக்கு கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து  அரைத்து, அதனுடன் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு ...

மலச்சிக்கல் தீர தினமும் ஒரு கொய்யா!

Image
மலச்சிக்கல் தீர தினமும் ஒரு கொய்யா! தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப்  பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின்  தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது. சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக்  குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது. நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.  மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை  வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது....

நீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்!!

Image
நீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்!! கோவைக்காய் மென்றாலே போதும் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை  குணப்படுத்த உதவும். கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க  விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை  காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு  நோய் வராமல் தடுக்கலாம். கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர்,  மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்...

மலக்குடல் சுத்தம் மற்றும் வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் அத்திக்காய்!!

Image
மலக்குடல் சுத்தம் மற்றும் வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் அத்திக்காய்!! அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதில்லுள்ள விதைப் பகுதியை சுரண்டி எடுத்துவிட வேண்டும். அதிக்காயின் நடுவில் பூச்சு மற்றும் பூழு இருக்கலாம் அதை நன்கு கவனித்து சுத்தப்படுத்த வேண்டும். நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு நன்கு கழுவ வேண்டும். அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன. அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய் வயிற்று புண்னுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம். அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்தில...

கோவைக்காய் துவையல் செய்ய...

கோவைக்காய் துவையல் செய்ய... தேவையானவை:  கோவைக்காய் - 100 கிராம் (ஆவியில் வேக வைக்கவும்) உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு கடுகு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை:  கோவைக்காயை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். மெல்லிய சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். பின்பு அதே எண்ணெயில் கோவைக்காயை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து வேகும் வரை வதக்கவும். புளியை சேர்த்து ஒரு  முறை புரட்டி எடுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து இதில் சேர்த்தால் கோவைக்காய் துவையல் தயார்.