உடலுக்கு ஆரோக்கியம் தருபவை
உடலுக்கு ஆரோக்கியம் தருபவை மழைக்காலங்களில் துளசி இலையை தேநீர்போல காய்ச்சிக் குடித்துவந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்றவை வராது. இலைக் கஷாயம் குடித்தால், தொண்டைப்புண் சரியாகும். இதன் இலைச்சாற்றுடன் கற்பூரவல்லி இலைச்சாறு சேர்த்துச் சூடாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்புச்சளி, மூச்சுவிட முடியாமை, மூச்சுத்திணறல் சரியாகும். குறிப்பாக மார்புச்சளி வெளியேறும். இந்த இலைச்சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சம அளவு சேர்த்து தேன் கலந்து, தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டால், நரம்புத்தளர்ச்சி நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலை இரண்டையும் சம அளவு எடுத்து 50 மி.லி சாற்றில் இரண்டு சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வேண்டும். இதை 48 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும். இதைச் சாப்பிடும்போது உப்பு, புளி, காரம் சேர்க்கக் கூடாது. இதன் இலைச் சாற்றுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துச் சூடாக்கி தேன் கலந்து உணவுக்குப் பின்னர் உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும். இலைகளை பிட்டவியலாக அவித்து, பிழிந...